தமிழகத்தில் கோழிக்கறி சாப்பிட்டால் கரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் கடைக்கு செல்லவில்லை. இதனால் இறைச்சிக் கடைக்காரர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வந்தனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காககடலூர் மாவட்டம்விருத்தாச்சலம் பகுதியில் உள்ள கடைகள் இரண்டரை கிலோ கறிக்கோழி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ஒலிபெருக்கி மூலம் கூவி கூவி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைகளுக்கு சென்று கோழிக்கறியை வாங்கிச் செல்கின்றனர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியது. ஒலிப்பெருக்கி மூலம் கூவி கூவி விற்கப்படும் செய்தி விருத்தாச்சலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.