
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் முடிந்து மனுதாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இன்று (19.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை வேட்புமனுதாக்கல் செய்தோரின் எண்ணிக்கை4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இதுவரை 4,015 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 3,341 ஆண்கள், 673 பெண்கள், ஒரு திருநங்கை எனவேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Follow Us