Skip to main content

2,500-ஐ கடந்த பாதிப்பு- தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

Over 2,500 affected - Today's Corona situation in Tamil Nadu!

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,385 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,533 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,158  இருந்து  13,319 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,372 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,059  பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும்  1,025 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-393  பேருக்கும், கோவை-117, குமரி-88, திருவள்ளூர்-142, காஞ்சிபுரம்-87, திருச்சி-72 பேருக்கு என கரோனா பதிவாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Heavy rain in 16 districts of Tamil Nadu today

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். அதே சமயம் வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 12 செ.மீ மழை பொழிந்துள்ளது. குண்டேரிப்பள்ளம், பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மிக்ஜாம்; ஆந்திராவின் நிலை என்ன?

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Migjam; What is the status of Andhra Pradesh?

 

தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் நேற்று முன் தினம் இரவு தமிழ்நாட்டை விட்டு ஆந்திர மாநிலக் கடலோரத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து, ஆந்திராவில் கன மழை பெய்ய துவங்கியது. அதுமட்டுமல்லாமல், ஆந்திராவில் மிக்ஜம் புயல் கரையைக் கடந்ததால், அங்கு மணிக்கு 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

 

மிக்ஜம் புயல் காரணமாக ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கிட்டேடுவில் அதிகபட்சமாக 39 செ.மீ, நெல்லூர் மாவட்டம், மனுபோலுவில் 36.8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இன்னும் பல இடங்களிலும் கன மழை பெய்துள்ளது. இதனால், ஆந்திராவின் பல ஆறுகள் முழு கொள்ள அளவை எட்டி வெள்ள நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளிலும், வயில்களிலும் சூழந்ததுள்ளது. புயல் கரையை கடந்த போது வீசிய சூறாவளி காற்றால் பல இடங்களிலும் மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்து பல சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

மிக்ஜாம் புயல் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 11 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார். அப்போது அவர், போர்க்கால அடிப்படையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெறவேண்டும். மேலும், உடனுக்குடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கிட வேண்டும். அனகாபல்லி பகுதியில் மட்டும் 52 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். விவசாயிகள் நஷ்டம் அடையக்கூடாது என அரசே இதுவரை 1 லட்சம் டன் தானியங்களை வாங்கியுள்ளது என்று தெரிவித்திருந்தார். 

 

மிக்ஜம் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், ஆந்திராவில் இதுவரை 194 கிராமங்களில் இருந்து 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 25 கிராமங்களும், 2 நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ஆந்திராவில் இதுவரை மிக்ஜாம் புயலால் ஏழு பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 70க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் பலத்த சேதமும் அடைந்துள்ளது. தற்போது ஆந்திர மாநில அரசு உடனடியாக 23 கோடியை மீட்புப் பணிக்காக ஒதுக்கியுள்ளது என ஆந்திர அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.