Over 150 people from Chennai traveled; A committee headed by Odisha Vrayyum Minister

Advertisment

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 50 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 044-25330952, 044-25330953, 25354771 என்கிற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும்சென்னையைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகவும்தகவல்கள்வெளியாகியுள்ள நிலையில் 132 பேர் இதுவரை காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

ஏற்கனவே தமிழக முதல்வர் ஒடிசா முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து வகையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்திருந்தார். அதன்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு தற்போது ஒடிசா செல்ல இருக்கின்றனர். அமைச்சருடன் வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த், போக்குவரத்து துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி, அர்ச்சனா ஐஏஎஸ் ஆகியோரும் ஒடிசா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.