Advertisment

பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுக்காய்; நாய் தலை சிதறியது!

Outcrop kept for hunting pigs; The dog's head was scattered

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அவுட்டுக்காய் வெடித்து தலை சிதறி கிடந்த நாயை கண்டனர்.

Advertisment

தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து ஐந்து அவுட்டுக்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக வெடி வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் முருகேசன் மீது துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Coimbatore dog died forest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe