Advertisment

கட்சியிலிருந்து ஓரம் கட்டியதால் பெரியகுளத்திலிருந்து வெளியேரும் ஓ.ராஜா!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளமதான் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த ஊர். இந்த ஊரிலேயே ஒபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரரான ஒ.ராஜாவும் குடியிருந்து அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

Advertisment

oraja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை ஆவின் தலைவராக ஒரு.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அன்று மதியமே அதிமுகவின் கட்சியின்ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ்சும். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இபிஎஸ் சேர்ந்து ஒ.ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக தூக்கியதுடன் மட்டுமல்லாமல் கட்சிக்காரர்கள் எந்த ஒரு தொடர்பும் ஒரு.ராஜாவுன் வைத்துக் கொள்ளக் கூடாது என அதிரடியாக அறிக்கையும் விட்டனர்.

அதைக்கண்டு ராஜாவும் அவருடைய ஆதரவாளர்களும் அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் இப்படி உடன்பிறந்த அண்ணனே கட்சியிலிருந்து தூக்கி விட்டார் என்று நினைத்து மனம் நொந்து போய் விட்டார் ஒ. ராஜா. அதன் பின் பெரியகுளம் வந்த ஒரு.ராஜா தனது ஆதரவாளர்கள் மூலமாக அடுத்த கட்டம் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து வருகிறார். இருந்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்குவதற்கு முன்பு கூட ஒரு வார்த்தை ஓபிஎஸ் போன் போட்டு பேசி இருக்கலாம் அதை விட்டு விட்டு என்னை அசிங்கப்படுத்திவிட்டார் என ஒ.ராஜா டென்ஷனாகவே இருந்து வருகிறார்.

இது சம்பந்தமாக ஒரு.ராஜா ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது....

அண்ணன் ஒ.ராஜா தொடர்ந்து பெரியகுளத்தில் இருக்க சங்கடப்படுகிறார். அதோடு தன்னை கட்சியில் இருந்து ஓரம் கட்டி அசிங்கப்படுத்திய அண்ணன் ஓபிஎஸ் முகத்தில் முழிக்க வேண்டிய நிலையும் வரும் அதனால அவர் முகத்திலேயே இனி முழிக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் பால் சொசைட்டியை பார்க்கபோகிறார். ஏற்கனவே பால் வியாபாரம் பண்ணி கொண்டிருந்தவர்தான் அதனால்தான் அதன் தலைவராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். மற்றபடி அவர் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே கிடையாது. தற்போது வரை ராஜாஅண்ணன் தான் கட்சிக்காரர்களை அரவணைத்துக் கொண்டு வேண்டிய உதவிகளையும்செய்து கட்சியையும் வளர்த்து வந்தார். அப்படிப்பட்டவரை உடன் பிறந்த அண்ணன் ஓபிஎஸ் கட்சியிலிருந்து தூக்கிவிட்டார். அதனால்தான் இங்க இருக்க வேண்டாம்என்ற மனநிலைக்கு அண்ணன் ஒ. ராஜா வந்துவிட்டார். அதனால்அவருடைய மாமனார் ஊரான உப்பார்பட்டி அருகே உள்ள போலேந்திரபுரத்திற்கு குடிபோக இருக்கிறார். அங்கு போய் எப்பொழுதும் போல் பால் சொசைட்டி கவனித்துக்கொண்டு அடுத்தகட்ட அரசியலில் ஈடுபடுத்தி கொள்ள தயாராக போகிறார் என்று கூறினார்கள்.

ஆக அதிமுகவிலிருந்து ஒ.ராஜாவை ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டியதின் மூலம்தான் ஒ.ராஜாவும் பெரியகுளத்தை விட்டு போகப் போகிறார் என்பதுதான் உண்மை!

ops o raja admk ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe