பண்ருட்டி அரசுப்பேருந்து பணிமனையில் காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அரசுப்பேருந்து பணிமனையில் 15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது. பகல் நேரங்களில் இந்த பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு பேருந்தில் திடீரென தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இருந்த 5 பேருந்துகளில் தீப்பற்றிய நிலையில் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
இதில் ஒரு பேருந்து முழுவதுமாக எரிந்தும், மூன்று பேருந்துகள் பகுதி அளவில் எரிந்தும் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.