தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் பணியில் தீவிர சோதனை, விழிப்புணர்வு பிரச்சாரம்உட்பட பல்வேறுமுயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் ஒரு ஊர் மக்களே ஒன்றுசேர்ந்து பணம் கொடுத்து வாக்குகளைப் பெறும் எண்ணத்தில் அரசியல்வாதிகள் ஊருக்குள் வர வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில்ஊருக்கு வெளியே பேனர் வைத்திருக்கும் நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரம் கரையக்கோட்டை கிராமத்தில், கிராமத்தின் எல்லை துவங்கும் இடத்தில்'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல.. வாக்களிப்பது அனைவருடைய தலையாய கடமை' என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.