Advertisment

'எங்கள் ஒற்றை தலைமையே...'-விஜய் பிறந்தநாளில் பரபரக்கும் போஸ்டர்

 'Our single leader ...' - A sensational poster on Vijay's birthday

அதிமுகவில் ஒருபக்கம் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சார்பில் 'எங்கள் ஒற்றை தலைமையே' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மதுரையைப் பரபரப்பாக்கியுள்ளது.

Advertisment

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அவரது ரசிகர்கள் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதைத்தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் இந்த வருடமும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல இடங்களில் விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள் மூலமாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கம். அதுவும் மதுரை என்றால் போஸ்டர் இல்லாமலா... விஜய் மட்டுமல்லாது அஜித், ரஜினி என பல்வேறு நடிகர்களின் ரசிகர்கள் அவ்வப்போது ட்ரெண்டிங் ஆகும் டாப்பிக்கை போஸ்டராக ஒட்டி மதுரையை பரபரப்பாக்க நினைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒருபோஸ்டரில் 'எங்கள் ஒற்றை தலைமையே' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

madurai Poster
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe