Advertisment

'நம் பள்ளி நம் பெருமை'; நொளம்பூரில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

nn

தமிழ்நாடு அரசும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்தும் 'நம் பள்ளி நம் பெருமை' என்னும் அடையாளத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு கூட்டத்திற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் கல்வியில் அக்கறையுள்ள அனைவரையும் ஆகஸ்ட் 31 அன்று அந்தந்த பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Advertisment

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 113, நொளம்பூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான கூட்டம் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisment

மேலாண்மைக் குழுவிற்கான பொறுப்பாளர்களாக தானாக முன் வருபவர்களை ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழிந்து அதிக ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்கள் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் தலைவர், துணைத் தலைவர், செயலாளர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தனர். நிகழ்வினை தலைமையாசிரியர் பாஸ்கர்ராஜ் தலைமையேற்று நெறியாள்கை செய்ய மற்ற ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர்.

Chennai TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe