Skip to main content

ஒட்டன்சத்திரம் தொகுதியை ஆறாவது முறையாக தக்கவைப்பாரா சக்கரபாணி?

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 


ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் ஆறாவது முறையாக சிட்டிங் எம்.எல். ஏ.சக்கரபாணி களம் இறங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் நடராஜன், தே.மு.தி.க. வேட்பாளர் சிவகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சக்திதேவி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அப்துல்ஹரி ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.

 

constituency



 தி.மு.க.

தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சிட்டிங் எம்எல்ஏவான சக்கரபாணி தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்று தொகுதியைத் தக்க வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதிலும் இடம்பிடித்து வருகிறார். அதோடு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நகரம் முதல் பட்டிதொட்டி வரை கொண்டு சென்றது சக்கரபாணிக்குப் பெரும் பலமாக இருந்து வருகிறது. அதுபோல் புயலால் மக்காச்சோளம், வாழை உள்பட விவசாயப் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வாங்கிக் கொடுத்தார். அதுபோல் தொகுதியில் விளையக்கூடிய கண்வலிக் கிழங்கை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தொகுதியிலுள்ள விவசாயிகளுக்காக குரல் கொடுத்தார். அதன்மூலம் விவசாய மக்களிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். அதுவும் பலமாக இருந்து வருகிறது. அதோடு கரோனா காலத்தில் கட்சிப் பாகுபாடு பார்க்காமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்துள்ளார்.

  அ.தி.மு.க.

 

constituency



அ.தி.மு.க வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள நடராஜனை, கட்சிக் காரர்களுக்கு பெரும்பாலும் தெரியாது. அதுபோல் தொகுதி மக்களிடம் பெரிய அறிமுகமில்லாததும் நடராஜனுக்கு பலவீனத்தைக் காட்டி வருகிறது. அதோடு சீட் கிடைக்காத பொறுப்பாளர்கள், பெயரளவில் தொகுதியில் வலம் வருவதும் பலவீனத்தைக் காட்டுகிறது. இருந்தாலும் கட்சி ஓட்டுடன், அமைச்சர் சீனியின் ஆதரவாளர் என்ற பெயரில்தான் தொகுதியில் வலம் வருகிறார்.

தே.மு.தி.க.

இத்தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவகுமாருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒரு கணிசமான ஓட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளராகவும் சேர்மனாக இருந்த நல்லசாமி டி.டி.வி. அணிக்கு தாவியதின் பேரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பதால், அதன்மூலம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் தேமுதிக கணிசமான ஓட்டுகளை வாங்க இருக்கிறது. அந்த ஓட்டுகள் அதிமுகவுக்கு விழக்கூடிய ஓட்டுகள் என்பதால் அதன் மூலம் நடராஜனுக்கு மேலும் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது. அதுபோல் தேர்தல் களத்திலும் தேமுதிக கூட்டணி பலத்துடன்  வளம் வருகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி-ஐந்து ஒன்றியமாக பிரிக்கப்பட்ட தொகுதி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
End of DMK party tussle- Constituency divided into five unions

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதில் மூன்றாவது முறையாக தேன்மொழி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஆளுங்கட்சியான அந்தப்பகுதி திமுகவினர் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வம் கட்டாமல் தங்களுக்குள் கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டு கட்சியை வளர்க்கவும் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அறிவாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த நிலக்கோட்டை தொகுதியில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை என இரண்டு யூனியன்கள் உள்ள. இந்த யூனியன்களுக்குட்பட்ட பகுதிகளை 5 ஒன்றியங்களாக பிரித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு வத்தலக்குண்டு வடக்கு, வத்தலக்குண்டு தெற்கு என புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் அடங்கிய வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.பி. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 9 ஊராட்சிகள் அடங்கிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றியத்திற்கு கனிக்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

End of DMK party tussle- Constituency divided into five unions

இதேபோல் நிலக்கோட்டை யூனியனை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை அடங்கிய பகுதிக்கு மணிகண்டன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் 7 ஊராட்சி ஒன்றியங்களாக சுருக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளராக சௌந்தரபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு நீண்ட நாள் போராடி வந்த கரிகால பாண்டியனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு ஒன்றியம் என ஒரு கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கரிகால பாண்டியன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக அதிக அளவில் வாக்குகளை பெற்றுத் தர வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் திமுக கொடி பறக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றியங்களை பிரித்து புது வியூகத்தை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்க ஆளும் கட்சியான திமுக தயாராகி வருகிறது.

Next Story

நடவு வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Increase in price of planting onions

 

சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை விண்ணைத் தொட்ட நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.

 

ஏற்கனவே முந்தைய காலகட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்திருந்தது. தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்தது. திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் பரிசு வழங்கும் அளவுக்கு அன்றைய காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருந்தது.

 

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் நடவு பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வியாபாரிகளிடம் இருந்து பழைய சின்ன வெங்காயத்தை வாங்கி நடவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் பழைய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.