ADVERTISEMENT

திருவாரூர் தேர்தலை கண்டு ஸ்டாலினுக்கு தொடை நடுங்குகிறது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

08:33 AM Jan 07, 2019 | Selvakumar.k

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் தொடை நடுங்குகிறார் என அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சித்துள்ளார்.

நாகையில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் வழக்கமான பாணியில் பேட்டியளித்தார் அதில், "திருவாரூர் இடைத்தேர்தலில் சூட்சமம் உள்ளது என ஸ்டாலின் கூறியதின் உள்நோக்கம் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம்தான். அதன் வெளிப்பாடுதான் தேர்தலை தள்ளிவைக்க சொல்கிறார் திமுக தலைவர். ஸ்டாலினுக்கு தேர்தலைகண்டு தொடை நடுங்குகிறது.

திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு திமுகவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. இடைத்தேர்தலை கண்டு அதிமுகவுக்கு எந்தவித பயமும் கிடையாது. இடைத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் எதிர்கொள்வதற்கு அதிமுக தயாராக உள்ளது" என தனக்கே உரிய பாணியில் பேசினார்.

திருவாரூர் கோயிலுக்கு வந்திருந்த அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை, "தற்போது உள்ள சூழலில் தேர்தல் நடத்துவது சரியானதாக இருக்காது" என்று கூறுகிறார்.

அதேபோல் சிறு கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில் ஆளும் அதிமுக அரசு தங்களுக்கான வேட்பாளரை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது, தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுவருகிறது என அதிமுக வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசப்படுகிறது.

இந்தநிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "அதிமுகவும், திமுகவும் ,திருவாரூர் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு பயப்படுகிறது, நடுங்குகிறது. அமமுக வெற்றி பெற்றுவிடும் என இரு கட்சிகளும் தொடைநடுங்கி நிற்கிறது" என திமுக, அதிமுகவை உசுப்பிவிட்டார்.

இன்று அதே பாணியில் அமைச்சர் ஓ.எஸ். மணியனும் பேட்டியளித்திருப்பது ஓ.எஸ். மணியனுக்கும் சசிகலா குடும்பத்தினருக்குமான உறவு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது" என்கிற முணுமுணுப்பு அதிமுக வட்டாரத்தில் ஒளிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT