Skip to main content

கஜாபுயல் பானியில் அறுவடை இயந்திர தட்டுப்பாடு இல்லை என கூறி வசைப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

நான்கு மாதங்களாக தூக்கத்தை இழந்து பல்வேறு அவதிகளை பட்டு சாகுபடி செய்யப்பட்டது, அறுவடை இயந்திரம் கிடைக்காமல் கைக்கு வராமலேயே வயலோடு போய்விடுமோ என்கிற மனவேதனையில் உறைந்திருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் மனதில் அம்பை பாய்ச்சுவதுபோல, அறுவடை இயந்திர பற்றாக்குறையே இல்லை, என்று ஒரு பொய்யை கூச்சமே இல்லாமல் கூறியிருக்கிறார் அதிமுக அமைச்சர் ஓ,எஸ்,மணியன் என ஆதங்கபடுகிறார்கள் விவசாயிகள்.

 

os manian issue

 



விவசாயிகளிடம் இந்த கோபம் எதற்கு என்பதை விசாரித்தோம். அப்போது" பல வருடத்திற்குப் பிறகு பருவமழையும், ஆற்றுப்பாசனமும் நல்லமுறையில் கைகொடுத்ததால் சாகுபடி நல்ல நிலைமையில் நடந்திருக்கு. ஆனால் வழக்கமாக ஜனவரி மாதத்திற்குள் அறுவடை செய்யவேண்டிது இயந்திர பற்றாக்குறையால் சாய்ந்து பணி ஈரத்தில் முலைக்கத்துவங்கிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் குறைந்தது ஐந்து கதிர்அறுக்கும் இயந்திரமாவது வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு ஊராட்சிக்கு ஒரு வண்டி கூட கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தமிழகத்தைப்போலவே காவிரி தண்ணீரைக்கொண்டு கர்நாடகாவிலும்,  அதிக விளைச்சல் விளைந்திருக்கு, அங்கு இயந்திரத்திற்கு மணிக்கு மூவாயிறம் ரூபாய் கிடைக்கிறது என அனைத்து இயந்திரங்களும் அங்கே சென்று விட்டன, ஆனால் இங்குள்ள மாவட்ட ஆட்சியர்களும், அமைச்சர்களும் மணிக்கு 1600 ரூபாய் என செய்திதாள்கள் மூலம் அறிவித்ததால் அனைவருமே அதிக பணம் கிடைக்கும் அன்டை மாநிலத்திற்கு சென்றுவிட்டன. அறிவிப்பை வெளியிட்டவர்கள் இயந்திரத்திற்கான ஏற்பாடை செய்யாமல் விட்டுவிட்டனர்.

 



இங்குள்ள அமைச்சர்களும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் டெல்டா மாவட்டங்களில் விளைச்சல் அதிகம் இருப்பதை காட்டிக்கொள்ள வெளிமாநிலத்தின் நெல்லை இறக்கி அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து கணக்கு காட்டுவார்கள். அதுபோலவே இந்த ஆண்டு இயந்திரம் கிடைக்காமல் கலங்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் தை மாதம் துவங்கி மாசி மாதத்திற்குள் அறுவடை முடிந்து விடும் ஆனால் இன்னும் பல கிராமங்களில் அறுவடையே துவங்கவில்லை இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல். விழாவுக்கு வந்த அமைச்சர் ஓ,எஸ்,மணியன் இதுபோன்ற பொய்யான பிரச்சாரத்தை செய்வது கண்டிக்கத்தக்கது.

இவர் கஜா புயலின் போது பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை என்று கூறி வாங்கிக்கட்டிக் கொண்டார். பிறகு தான் வரலாறு காணாத பேரழிவை கண்டிருந்ததை அவர் உணர்ந்தார். அதுபோல்தான் எந்த ஒரு ஆய்வையும் செய்யாமலேயே இப்படி ஒரு பொய்யைச் சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்," என்று எரிச்சலடைகிறார்கள். அப்படி என்னதான் கூறினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என்று பார்ப்போம். நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், "இந்தியாவில் பெரிய மாநிலங்களில் முதன்மையான மாநிலம் தமிழகம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது தமிழகத்தின் சிறப்பான வேளாண் உற்பத்தி. வேளாண் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற்று ஐந்துமுறை விருது பெற்று இருப்பது சிறப்புக்குரியது.அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்கள் அனைத்தும் டெல்டா மாவட்டங்களில் தான் இயங்கி வருகின்றன. சம்பா நெல் அறுவடை பணிகளுக்கான இயந்திர தட்டுப்பாடு இங்கு இல்லை. எந்த இடையூறும் இல்லை," என வாய் கூசாமல் கூறியதுதான் அவர்களின் கோபத்திற்கான காரணம்.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.