Advertisment

6 பேரை வாழ வைத்த 61 வயது முதியவர்; திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

organs of an old man who suffered passed away in an accident were donated to 6 people

Advertisment

திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த 61 வயது முதியவர் ஒருவர், மே15 ஆம் தேதி பஞ்சப்பூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மூளை சாவடைந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவித்த மருத்துவர்கள், அவர்களிடம் உடல் உறுப்பு தானமாக வழங்குவது குறித்து தெரிவித்தனர். தானம் செய்ய முதியவரின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து முதியவரின் கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மற்றொரு சிறுநீரகம் மதுரை தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கும், திருச்சியில் கண் பார்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இருவருக்கு இரு கண்களும், உடலின் தோல், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும் தானமாக பெறப்பட்டது.

Advertisment

இந்த தகவலை திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தானம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு தானம் பெற்ற நோயாளிகள் தரப்பில் நன்றியும், மருத்துவமனை சார்பில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

hospital trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe