Advertisment

நம்மாழ்வார் நினைவு தினம்; உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆர்வலர்கள் 

organic farming scientist nammalvar anniversary celebrated in chidambaram 

Advertisment

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின்9 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது.

இயற்கைவேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விவசாயிகள் மத்தியில் இயற்கைஉரங்கள் மற்றும் தொழு உரங்களின்பயன்களையும், இயற்கை விவசாயத்தின் நன்மைகளையும், செயற்கைஉரங்களின் தீமைகள் பற்றியும், நமது உணவு முறைகள் பற்றியும் மக்கள் மனதில் பதியுமாறு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இவர் பல்வேறு கருத்தரங்குகளில்கலந்து கொண்டு இயற்கைவேளாண்மையின் நன்மைகளைஎடுத்துக் கூறிவந்தார்.

சிதம்பரம் மேல வீதி கஞ்சி தொட்டி முனையில் இயற்கை வேளாண் வாழ்வியல் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாரின் 9- ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நம்மாழ்வாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், இயற்கைவிவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், "விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசி பற்றிய விழிப்புணர்வை அரசுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும்" என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Cuddalore nammalvaar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe