nkn

மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

Advertisment

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (47) லாரி டிரைவர். இவரது மனைவி கீதா.கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு கோவிந்தராஜ் லாரியில் லோடு ஏற்றிச் சென்றார்.

Advertisment

கண்ணூர் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் கோவிந்தராஜ் படுகாயமடைந்தார். மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் மூளைச்சாவு அடைந்தார். கோவிந்தராஜன் உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி கீதா மற்றும் குடும்பத்தினர் சம்மதித்தனர். அவரது கண் விழித்திரை,கல்லீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டது. நேற்று இரவு கோவிந்தராஜ் உடல் கொத்தமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அரசு சார்பில் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.