ADVERTISEMENT

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசாணை

12:50 PM Oct 13, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மானியம் பெறும் அனைத்து நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, வங்கிக் கணக்குகள், பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அரசிடமிருந்து மானியம் பெறும் அனைத்து நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பது, வாடகைதாரர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றன. முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், குடிசை நுகர்வோர், பொது வழிபாட்டு தலங்கள், விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள் என மானியம் பெறும் நுகர்வோர்கள், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT