இந்தியாவில் 129 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில்,கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.கரோனா வைரஸ்தாக்கம் காரணமாக தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து இருக்கிறது.அதோடுசுற்றுலாத்தலங்கள், கோயில்களில் மக்கள் கூடகட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Orders to close shops in chennai tnagar

Advertisment

இந்நிலையில் சென்னையில் உள்ள தி.நகரில் உள்ள அணைத்து கடைகளையும்மூட சென்னை மாநகராட்சி முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னையில் உள்ள 3,800 ஏடிஎம்களை அவ்வப்போது தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ்தெரிவித்துள்ளார். சென்னையில் பூங்காக்கள் மூடப்படும், அவசிய தேவை தவிர்த்து மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.