publive-image

Advertisment

காவல்துறையில் உள்ள ஆர்டர்லி முறையை நான்கு மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையையும், கண்ணியத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

ஆர்டர்லி ஒழிப்பு முறைகுறித்து கடந்த 1979- ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி ஆர்டர்லிகளாக உள்ள காவலர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். ஆர்டர்லிகளைப் பயன்படுத்துவதில்லை என மேலும்265 அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கியிருப்பதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதைத் தொடர்ந்து, ஆர்டர்லி முறைகளை நான்கு மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.