/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eeg.jpg)
தமிழகத்தில் விடுமுறையில் உள்ள் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரிசி, பருப்புடன் 5 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தீவிரம் அடைந்து வருவதால் கடந்த சில வாரங்களாகப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு தடைபட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாத வேலை நாட்களைக் கருத்தில் கொண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உலர் பொருட்களுடன் 5 முட்டைகளை வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)