சென்னையில் உபர் ஈட்ஸ்செயலியில் பிரியாணி ஆர்டர் செய்த கல்லூரி மாணவி76 ரூபாய்க்கு 40 ஆயிரத்தை இழந்தபரிதாப சம்பவம் நடந்துள்ளது. கூகுளில் கொட்டிக் கிடக்கும் சேவை எண்களில் அதிகம் போலியே இப்படி போலி சேவை எண்ணால் சுளையாக 40 ஆயிரத்தை இழந்துள்ளார் ஒருகல்லூரி மாணவி.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த மாணவி பிரியா அகர்வால். இவர் தன் நண்பர்களுடன் வடபழனிக்கு வந்துள்ளார். அப்போது பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது செல்போனில் இருந்து உபர் ஈட்ஸ்செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார் அந்த கல்லூரி மாணவி. பிரியாணிக்கானதொகை76 ரூபாய் மாணவி பிரியாவின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது.ஆனால் பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகுஆடர்ரத்து செய்யப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் செலுத்திய பணம் 76 ரூபாய்திரும்ப வரவில்லை செய்யப்பட்ட ஆர்டர் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து உபர் ஈட்ஸ்சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்கலாம் என அவர் உபர் ஈட்ஸ் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில்சர்ச் செய்துள்ளார். அப்போது வந்த நம்பரை உபர் ஈட்ஸ்சின்உண்மையான கஸ்டமர் கேர் நம்பர் என நினைத்து அந்த நம்பருக்கு கால் செய்து உள்ளார் அந்த மாணவி.எதிர்முனையில் பேசிய நபர் மாணவியின்வங்கி விவரங்களை வாங்கியுள்ளார். பின்னர் 76 ரூபாய் சின்ன தொகையாக இருப்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையில் திருப்பி செலுத்த முடியாது எனவே5000 ரூபாயாகஅனுப்பினால் மொத்தமாக சேர்த்து 5076 ரூபாயாக திருப்பி செலுத்தப்படும்என கூறியுள்ளார்.இதனை நம்பிய மாணவி பிரியா கூகுள் பேசெயலி மூலம் 5,000 ரூபாயை அந்த போலிசேவை மைய மோசடி நபர்சொல்லும் வங்கி எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.
இதன்மூலம் மாணவியின் வங்கி விவரங்களை தெரிந்து கொண்ட மோசடி நபர்பணம் வந்து சேரவில்லை என கூறிய மாணவியிடம் தற்போது உங்களுக்கு ஒரு ஓடிபிஎண்வரும் அதைத் தெரிவித்தால் பணம் கணக்கில் வந்து சேரும் எனக்கூற மாணவியும் ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். ஆனால் தனது கணக்கில் பணம் வரவில்லை என மாணவி கூற அப்படியானால் மீண்டும் ஓடிபி எண்ணைகூறும்படிகேட்க, இப்படிஎட்டு முறை ஓடிபிஎண்ணை கேட்டுள்ளான்.ஒவ்வொரு முறையும் 5000 வீதம் மொத்தம் 40 ஆயிரம் ரூபாயைஅந்த மாணவியின் வாங்கி கணக்கில் சுருட்டிய பின்அதன்பிறகு தொடர்பை துண்டித்துவிட்டான் அந்த மோசடி நபர்.
அதற்குப் பிறகுதான் போலியான சேவை எண்ணிற்கு அழைத்து பணத்தை இழந்து விட்டோம் என்பது அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதனையடுத்து வடபழனி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று அண்மையில் கூகுளில் இருக்கும் கூகுள் பேசேவை எண்ணுக்கு தொடர்பு கொள்வதாக கூகுளில் வந்த போலியான சேவை எண்ணைதொடர்புகொண்டு சென்னையில் பணிபுரியும் ஆசிரியர் பௌவுலின் என்பவர் இதேபோல் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று தெரியாமல்போலி சேவை எண்களை தொடர்பு கொள்ளபவர்களிடம்மர்ம நபர்கள் இது போன்று ஓடிபி எண்களை பெற்றுக்கொண்டு அவர்களது வங்கி கணக்கில் பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பாக சென்னை வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார்கள் குவிந்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் தனியார் பணப்பரிவர்த்தனை செயலிகள் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் எனபோலீஸார் தெரிவித்துள்ளனர்.