Skip to main content

ஆர்டர் செய்தது 76 ரூபாய் பிரியாணி... பறிபோனது 40 ஆயிரம்...!;பணத்தை இழந்த கல்லூரி மாணவி!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

சென்னையில் உபர் ஈட்ஸ் செயலியில் பிரியாணி ஆர்டர் செய்த கல்லூரி மாணவி 76 ரூபாய்க்கு 40 ஆயிரத்தை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கூகுளில் கொட்டிக் கிடக்கும் சேவை எண்களில் அதிகம் போலியே இப்படி போலி சேவை எண்ணால் சுளையாக 40 ஆயிரத்தை இழந்துள்ளார் ஒரு கல்லூரி மாணவி. 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த மாணவி பிரியா அகர்வால். இவர் தன் நண்பர்களுடன் வடபழனிக்கு வந்துள்ளார். அப்போது பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது செல்போனில் இருந்து உபர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார் அந்த கல்லூரி மாணவி. பிரியாணிக்கான தொகை 76 ரூபாய்  மாணவி பிரியாவின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு ஆடர் ரத்து செய்யப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் செலுத்திய பணம் 76 ரூபாய் திரும்ப வரவில்லை செய்யப்பட்ட ஆர்டர் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

cheating


இதனையடுத்து உபர் ஈட்ஸ் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்கலாம் என அவர்  உபர் ஈட்ஸ் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில் சர்ச் செய்துள்ளார். அப்போது வந்த நம்பரை  உபர் ஈட்ஸ்சின்  உண்மையான கஸ்டமர் கேர் நம்பர் என நினைத்து அந்த நம்பருக்கு கால் செய்து உள்ளார் அந்த மாணவி. எதிர்முனையில் பேசிய நபர் மாணவியின் வங்கி விவரங்களை வாங்கியுள்ளார். பின்னர் 76 ரூபாய் சின்ன தொகையாக இருப்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையில் திருப்பி செலுத்த முடியாது எனவே 5000 ரூபாயாக அனுப்பினால் மொத்தமாக சேர்த்து 5076 ரூபாயாக திருப்பி செலுத்தப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி பிரியா கூகுள் பே செயலி மூலம் 5,000 ரூபாயை அந்த போலி சேவை மைய மோசடி நபர் சொல்லும் வங்கி எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.

 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


இதன்மூலம் மாணவியின் வங்கி விவரங்களை தெரிந்து கொண்ட மோசடி நபர் பணம் வந்து சேரவில்லை என கூறிய மாணவியிடம் தற்போது உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அதைத் தெரிவித்தால் பணம் கணக்கில் வந்து சேரும் எனக்கூற மாணவியும் ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். ஆனால் தனது கணக்கில் பணம் வரவில்லை என மாணவி கூற அப்படியானால் மீண்டும் ஓடிபி எண்ணை கூறும்படி கேட்க, இப்படி எட்டு முறை ஓடிபி எண்ணை கேட்டுள்ளான். ஒவ்வொரு முறையும் 5000 வீதம் மொத்தம் 40 ஆயிரம் ரூபாயை அந்த மாணவியின் வாங்கி கணக்கில் சுருட்டிய பின் அதன்பிறகு தொடர்பை துண்டித்துவிட்டான் அந்த மோசடி நபர்.

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


அதற்குப் பிறகுதான் போலியான சேவை எண்ணிற்கு அழைத்து பணத்தை இழந்து விட்டோம் என்பது அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதனையடுத்து வடபழனி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


இதேபோன்று அண்மையில் கூகுளில் இருக்கும் கூகுள் பே சேவை எண்ணுக்கு தொடர்பு கொள்வதாக கூகுளில் வந்த போலியான சேவை எண்ணை தொடர்புகொண்டு சென்னையில் பணிபுரியும் ஆசிரியர் பௌவுலின் என்பவர் இதேபோல் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!

இதுபோன்று தெரியாமல் போலி சேவை எண்களை தொடர்பு கொள்ளபவர்களிடம் மர்ம நபர்கள் இது போன்று ஓடிபி எண்களை பெற்றுக்கொண்டு அவர்களது வங்கி கணக்கில் பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பாக சென்னை வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார்கள் குவிந்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் தனியார் பணப்பரிவர்த்தனை செயலிகள் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மக்களே உஷார்! அடுத்தடுத்து வரும் ஃபோன் கால் - மிரட்டும் கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 gang extorts money from people claiming to be involved in cannabis trafficking

சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் கொள்ளையர்கள், ஏதேனும் ஒரு வகையில் நமக்கு தொடர்பு கொண்டு சில விபரங்கள் கேட்பார்கள். அப்போது ஓடிபி எண் கூறினால் மட்டுமே நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும். ஆனால் இப்போது பல வகைகளிலும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். அவரது பான் கார்டு எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல விஷயங்களை மோசடியில் ஈடுபடுபவர்கள் சுலபமாக எடுத்து விடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி தொடர்ந்து மோசடி கும்பல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி எண் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதும், இந்த முறையில் ஏமாற்ற முடியவில்லை. அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு லிங்க் அனுப்பி, அதனை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு பணம் வரும் அல்லது வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என மோசடி அறிவிப்புகளைக் கொடுத்து குறிப்பிட்ட அந்த லிங்கை தொடும்போது நமது பணம் பறிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபர்கள், தற்போது பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே போதைப்பொருள் சம்பந்தமான செய்திகள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், தங்களைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் என்றும், மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி தற்போது மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதே பாணியில் கடந்த 4  நாட்களில் 2 சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை கடந்த சில  தினங்களுக்கு முன்பு, சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இந்த முகவரிக்கு போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண்ணிடம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க தங்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதன்படி, அந்தப் பெண்ணும் 21,400 ரூபாயை உடனே அனுப்பியுள்ளார். இந்தியன் வங்கிக் கணக்கு மூலம் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோன்று இந்த சம்பவம் நடந்த மறுதினம், ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் வசித்து வரும் ராம் திலக் என்ற காவலரின் மனைவி அனுஷாவிற்கும் இதே பாணியில் போன் வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்களின் ஆதார் எண்ணை வைத்து போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் கூறி, பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். இப்படி, ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அறிய முயன்றுள்ளனர். ஆனால் அனுஷா அதனைத் தவிர்த்து விட்டார். அதுமட்டுமல்லாமல், அவர்களிடம் பேசிய அனுஷா, என் மீது போதைப் பொருள் சம்பந்தமான வழக்கு உள்ளது என்றால் சென்னை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். அவர்கள் எங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள் எனத் தைரியமாகக் கூறியுள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட வட மாநில கும்பல் தொடர்பைத் துண்டித்து விட்டனர். இதில் முழுக்க முழுக்க மோசடி கும்பல் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். அதன் பிறகு அனுஷா நடந்தவற்றை தனது கணவர் ராம் திலக்கிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்‌. அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் இந்த நூதன மோசடி குறித்து விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.