Advertisment

சென்னையில் விளம்பர பதாகைகளை உடனே அகற்ற உத்தரவு!

Advertisment

Order to remove advertising banners in Chennai immediately!

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கும் மாநகர வருவாய் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பதாகைகளையும் கட்டுமானத்துடன் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து விதிகளின் படி அபராதம் வசூலிக்க வேண்டும் (அல்லது) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர பலகை அகற்றியது தொடர்பாக, இன்று மாலைக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களை சென்னை மாநகர வருவாய் அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
இதையும் படியுங்கள்
Subscribe