Published on 24/05/2021 | Edited on 24/05/2021

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகத் தீவிர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளும் நாளை முதல், காலை 8 மணி முதல் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்காக, குறிப்பாக அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நிறைய ஏழைக் குடும்பங்கள் ரேஷன் கடைகளை நம்பியே இருப்பதால் இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும் என் நம்பப்படுகிறது.