Advertisment

பிரபல ஜவுளி கடைக்கு சீல் வைக்க கிரண்பேடி உத்தரவு!

புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கம் அருகே கடந்த வாரம் புதிதாக திறக்கப்பட்டது கடலூரின் புகழ்பெற்ற கே.வி டெக்ஸ் துணிக்கடை. போக்குவரத்துக்கு இடையூறாக இக்கடை அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்த கிரண்பேடி உரிய வர்த்தக உரிமம் பெறாதது, முழுமை பெறாத உள் கட்டமைப்பு பணிகள், வாகன நிறுத்துமிடம், நகரமைப்பு குழும அனுமதி இல்லாதது ஆகியவற்றால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கை நிறுவனத்தை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி கே.வி டெக்ஸ் கடைக்கு சீல் வைத்தார்.

Advertisment
pondy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe