Advertisment

தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவு!

tn

தமிழகத்தில் தினசரிகரோனாபாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐநெருங்கும் நிலையில்கரோனாபரிசோதனைகளை அதிகரிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசிபோடுவதைத்திட்டமிட்டுத்துரிதப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.கரோனாபாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும்,கரோனாகண்டறியப்படும் நபருடன்தொடர்பிலிருந்தஅனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், 12ஆம் தேதிமெகாமுகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிபோடுவதைஉறுதிசெய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நேற்று ஒருநாள்கரோனாபாதிப்பு என்பது1,587லிருந்து அதிகரித்து 1,596ஆகப் பதிவாகியது. இது நேற்று முன்தினஎண்ணிக்கையை விடச் சற்று அதிகம். கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த ஒருநாள்தொற்றுஇரண்டாம் நாளாக நேற்றும் அதிகரித்திருந்தது. நேற்றுஒரே நாளில் தமிழகத்தில் 1,59,684 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

Radhakrishnan Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe