
கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கட்டுப்பாடு இல்லாமல் ஆபாசம் நிறைந்தவையாக இருப்பதாகவும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனதேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மனுதாக்கல்செய்திருந்தனர். இந்நிலையில் 'இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைநடத்த வேண்டும், அப்படி நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகவோ, ஒரு மதத்திற்கு எதிராகவோபிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்போர் குட்கா, மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறுஏற்படுத்த கூடாது' என கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுகுமாரகுரூப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Follow Us