Order of High Court; First came the protest

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் அனைத்து அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் இருந்தால் அகற்றி, அதனை உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எதிர்த்துள்ளார்.

Advertisment

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பொதுஇடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், உள்ளாட்சி பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் கொடிக்கம்பங்களை இன்றிலிருந்து 12 வார காலங்களில் அகற்றும்படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தவறும் பட்சத்தில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளித்து இரண்டு வார காலத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். அதேபோல் தனியார் நிலங்களில் கொடிக் கம்பங்களை வைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தலைமைச் செயலாளர் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisment

இது தொடர்பான அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பத்தை அகற்றுவதற்கான கால நிர்ணயத்தை நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற ஏப்ரல் 28ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்ததோடு, உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

NN

இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை அளித்துள்ள இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையாக எதிர்த்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொடிக்கம்பங்கள் குறித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும். பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் வைக்கக்கூடாது என்பது அடிப்படை உரிமை மீறல். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

Advertisment