Advertisment

சர்ச்சை பேச்சு... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்ய ஆணை!

ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி மற்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்.டி, எஸ்.சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. பல்வேறு தரப்பிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்தன. அந்த நேரத்தில் ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 'உணவுக்கு வழியில்லாமல் இருந்த நிலையில் கம்யூனிஸம் பேசிவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறீர்களே...' என விமர்சித்து பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் கிளம்பின. குறிப்பாக திரைப்படஇயக்குநர் ப.ரஞ்சித் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், 'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி.வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது' என தெரிவித்திருந்தார்.

Advertisment

ilayaraja

இந்த சர்ச்சை பேச்சு குறித்துதொடர்பாக தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தானாக புகார் பதிவு செய்து விசாரித்த நிலையில், சென்னை காவல்துறை, கீ.வீரமணி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல் ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ilayaraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe