சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ''குயின்ஸ் லேண்ட்'' பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
நேற்று சென்னை பூந்தமல்லியில் இருக்கும் குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் ஃபிரீ ஃபால் எனும் விளையாட்டு ராட்டினத்தின் வயர்அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ராட்டினத்தில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர். வயர் அறுந்து விழுந்து ராட்டினம் விபத்தாகும் வீடியோகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.