building

சென்னை செங்குன்றத்தை அடுத்த நரவாரிகுப்பம் பேரூராட்சியில் ராஜப்பா, ஜெயலட்சுமி ஆகியோர் விதிகளை மீறி 3 மாடி பல்பொருள் அங்காடி கட்டியதாக சீல் வைத்ததுடன், கட்டிடத்தை இடிக்க தமிழ்நாடு வீட்டுவசதி துறை சீல் வைக்க 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

Advertisment

இந்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிபதி எம். வேணுகோபால், நீதிபதி எஸ். வைத்தியநாதன் அமர்வு, ஒரு மாதத்திற்குள் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டு தள்ளுபடி செய்தனர். அக்கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மறுஆய்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றம் வரை சென்று முற்று பெற்ற ஒரு விஷயத்துக்காக தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சிப்பது துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதிகள் கண்டித்துள்ளனர். மேலும், இதை அனுமதித்தால் விதிகளை மதித்து நடக்கும் குடிமக்களையும் விதிமீறல்களை செய்ய தள்ளுவதாக அமையும் என்றும் அறுவுறுத்தியுள்ளனர். கட்டிட விவகாரங்களிலேயே நெறிமுறைகளை பின்பற்ற முடியதவர்கள், எப்படி அவர்களது சந்ததியினரை நன்னெறிமிக்க சமூகமாக மாற்ற முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.