Advertisment

அரசு அறிவித்த நிவாரணத்தால் மனமுடைந்து விவசாயி தற்கொலை

o

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தராசன்(வயது 57). ஐந்து ஏக்கரில் நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் கஜாவின் கோர தாண்டவத்திற்கு தப்பிக்கவில்லை. இதனால் மனமுடைந்த விவசாயி விரக்தியின் உச்சத்தில் இருந்த போது தமிழக அரசு அறிவித்த நிவாரணம் மேலும் ரணமாக்கிவிட்டது.

Advertisment

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த போது அரசு நிவாரணம் போதாது என்று நொந்துகொண்டார். அதன் பிறகு வீட்டிற்கும் வரவில்லை. மகன் போய் அழைத்தும் வரவில்லை.

Advertisment

o

இந்த நிலையில் தான் விவசாயி சுந்தரராசன் அங்குள்ள குளத்துக்கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விபரம் அறிந்த சிபிஎம் மகேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் விவசாயி சுந்தரராசன் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னதுடன்.. தமிழக அரசு அறிவித்த குறைவான நிவாரணமே சுந்தரராசனை கொன்றுவிட்டது. அதனால் அவரது குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இனிமேலாவது தென்னை மற்றும் பலா போன்ற மரங்கள் பயிர்களுக்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

orathanadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe