orathanadu incident; S.P suspended girl for negligence

தஞ்சையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் கொடுத்த புகாரை அலட்சியப்படுத்தியதாக பெண் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டு பகுதியில் கடந்த 12ம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று பெண் எஸ்.ஐ சூர்யாவை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பர் கவிதாசன், திவாகரன், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பாப்பாநாட்டு பகுதியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்; நிவாரண உதவி மட்டுமல்லாது அவருக்கு அரசாங்க வேலையும் கொடுக்க வேண்டும்; புகாரை அலட்சியமாக விசாரித்த காவல்துறை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பெண் எஸ்.ஐ சூர்யாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.