Skip to main content

அரசு அறிவித்த நிவாரணத்தால் மனமுடைந்து விவசாயி தற்கொலை

Published on 22/11/2018 | Edited on 22/11/2018

 

o


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தராசன்(வயது 57).  ஐந்து ஏக்கரில் நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் கஜாவின் கோர தாண்டவத்திற்கு தப்பிக்கவில்லை.  இதனால் மனமுடைந்த விவசாயி விரக்தியின் உச்சத்தில் இருந்த போது தமிழக அரசு அறிவித்த நிவாரணம் மேலும் ரணமாக்கிவிட்டது. 

 

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த போது அரசு நிவாரணம் போதாது என்று நொந்துகொண்டார். அதன் பிறகு வீட்டிற்கும் வரவில்லை. மகன் போய் அழைத்தும் வரவில்லை.

 

o


   இந்த நிலையில் தான் விவசாயி சுந்தரராசன் அங்குள்ள குளத்துக்கரையில்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  
விபரம் அறிந்த சிபிஎம் மகேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் விவசாயி சுந்தரராசன் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னதுடன்.. தமிழக அரசு அறிவித்த குறைவான நிவாரணமே சுந்தரராசனை கொன்றுவிட்டது. அதனால் அவரது குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இனிமேலாவது தென்னை மற்றும் பலா போன்ற மரங்கள் பயிர்களுக்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.


   

சார்ந்த செய்திகள்

Next Story

தூக்கில் தொங்கிய பயிற்சி மருத்துவர்; கொலையா என போலீசார் விசாரணை

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

thanjavur orathanadu veterinary college trainee doctor incident 

 

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (வயது 23). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நிலையில், தஞ்சாவூர் அருகில் உள்ள ரெட்டிபாளையம் கால்நடை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வசந்த் சூர்யாவும், அவருடன் அதே கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்களான சிவராஜ் மற்றும் சதிஷ்குமாரும் மருத்துவமனையில் தங்கி உள்ளனர். சிவராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரும் மருத்துவமனையில் உள்ள அறையில் உறங்கி உள்ளனர். வசந்த் சூர்யா மருத்துவமனையில் வெளியே உள்ள முகப்பு அறையில் உறங்கி உள்ளார்.

 

இந்நிலையில், வசந்த் சூர்யா நேற்று காலை மருத்துவமனையின் வெளிப்புறத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் தூக்கில் பிணமாகத் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த் சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்த சூர்யா படுத்திருந்த இடத்தில் மதுபாட்டில் ஒன்று இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வசந்த சூர்யா பயன்படுத்திய தொலைபேசியை கைப்பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர். வசந்த் சூர்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

Next Story

தேர்தல் விதியா? அப்படின்னா.. விதி தெரியாத அதிகாரிகள்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 

     தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசியல் கட்சி கொடிகள், கட்சித் தலைவர்களின் படங்களை மறைக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்று. இதில் தந்தை பெரியார், மற்றும் புலவர்கள் சிலைக்கு விலக்கு உண்டு. அப்படித்தான் பல தொகுதிகளிலும் பின்பற்றி வருகிறார்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள்.

 

th


    ஆனால் தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் தஞ்சை நகரம் தொடங்கி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வரை அனைத்து ஊர்களிலும் கட்சிக் கொடிகள் பறப்பதுடன் மறைந்த கட்சித் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்படவில்லை. 


தஞ்சையில் ரயிலடியில் உள்ள எம். ஜி. ஆர். சிலை மற்றும் இரவில் திடீரென அமைக்கப்பட்ட ஜெ. சிலைகள் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறது. மற்றும் அண்ணா சிலைகள் மறைக்கப்படாமல் உள்ளது. அதே போல ஒரத்தநாட்டிலும் உள்ளது.


  தஞ்சை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் செல்லாதா? இல்லை அதிகாரிகளுக்கு தெரியவில்லையா என்கின்றனர் தஞ்சை மக்கள்.