‘2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்’ - வானிலை மையம் தகவல்!

Orange Alert for 2 days Meteorological Department information

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகக் கடந்த சில நாட்களாகக் குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (17.12.2024) வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தெற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை 05.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

எனவே தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழகத்திற்கு இன்றும், நாளையும் (18.12.2024) ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe