தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (20/11/2019) வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து மேயர், மாநகராட்சி தலைவர், நகராட்சி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
மேலும் கட்டணம் செலுத்திய அசல் ரசீதுடன் வந்து அதிமுக தலைமையகத்தில் வரும் 25- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதிக்குள் பணத்தை திரும்பப் பெறலாம் என தெரிவித்துள்ளது. 24- ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன் தாங்கள் செலுத்திய விண்ணப்ப கட்டண தொகையை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.