Secretariat

Advertisment

சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறையில் இன்று அதிகாலையில் யாகம் நடத்தப்பட்டது. இதில் ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

அறை புதுப்பிக்கப்பட்டதால் இந்த யாகம் நடந்தது என்று கூறப்படுகின்றது. ஆனால் காரணம் வேறாக இருக்கிறதாம். வரும் புது வருடம் தனக்கான வருடமாக இருக்கும் என்றும், உங்கள் உயர்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை மீண்டும் நீங்களேஆட்சி அதிகாரத்தில் வரவாய்ப்புள்ளதுஎன்றும், அதற்காக இரண்டு யாகம் நடத்தப்படவேண்டும் என்றும், ஒன்று வீட்டிலும் இன்னொன்று நீங்கள் இருக்கும் அறையிலும் உங்கள் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் சொல்ல, அதற்காகதான் தன்னுடைய வீட்டிலே பசு யாகம் நடத்தியுள்ளார் ஓபிஎஸ்.

அதனையடுத்து இன்று அந்த சாமியார் சொன்னது போலவே எடப்பாடியின் மீது தற்போது சொல்லப்படும் கொடநாடு பிரச்சனைகள் பெரிதாக வெடிக்கும் பட்சத்தில் இன்று அதிகாலையில் தலைமை செயலகத்தில் யாகம் நடத்தப்பட்டதாம்.