Advertisment

வருமான வரித் துறையை எதிர்த்த வழக்கு; வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்!

 OPS Withdrawn Case against Income Tax Department

தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்புடையவீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த காலங்களில்சோதனை நடத்தினர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ்.க்குவருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில், 2015 - 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும்,2017 - 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது வருமான வரித் துறை.

Advertisment

அந்த நோட்டீசின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வருமான வரித் துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தது. அத்துடன், "வருமான வரித் துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும்வழக்கின் இறுதித்தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது" என்றும் தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த வழக்குநீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "வருமான வரித் துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரித் துறையில்மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவைத்திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" என்றுஓ.பி.எஸ்.தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதைஏற்றுக்கொண்டு மனுவைத்திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டார் நீதிபதி.

ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe