பன்னீரும், தமிழ்த்தாய் வாழ்த்தும் புறக்கணிப்பு - பாதியில் எழுந்துபோன எடப்பாடி!

ops eps

மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் 23 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ள முதல்வரும் துணைமுதல்வரும் வருகைதர, விழா மேடையிலோ வரவேற்பு பேனரிலோ ஓ.பன்னீர்செல்வம் படம் மருந்துக்குகூட வைக்காதது பன்னீர் ஆதரவாளர்களை ஆச்சரியபட வைத்தது.

11.30 க்கு வந்த முதல்வர் பூமி பூசையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவிட்டு மேடை ஏறினார். முதலில் ஆட்சியர் வரவேற்று பேசிவிட்டு இறங்க, உதயகுமார் தொகுத்து வழங்க மைக்கை பிடிக்க, ‘’ வேண்டாம்...’’எனக் கிளம்பினார் முதல்வர். அதை தொடர்ந்து மேடையில் இருந்து பன்னீர் மற்றும் அமைச்சர்களும் கீழே வர, நான்கு பேருக்கு மட்டும் ஸ்கூட்டி கொடுத்து பத்திரிகைக்கு போஸ் கொடுத்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அவரமாக காரில் ஏறி பறக்க... அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், "அரசு விழா என்றால் முறைப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கூட பாடவில்லை. வந்திருந்த எங்களையும் உதாசீனப்படுத்துவது போல் உள்ளது’’ என்று முனங்கியபடி சென்றார்கள்.

இரு முதல்வர்களும் பங்கேற்ற விழா பாதிலேயே முடிந்து அமர்ந்திருந்த மக்களையும் பயனாளிகளையும் உதாசீனப்படுத்துவது போல் அமைந்தது. கட்சியினரும் அதிருப்தியடைந்தனர்.

boy tamil
இதையும் படியுங்கள்
Subscribe