கோயம்பேடு மார்க்கெட்டில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று (12.02.2021) மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயம்பேடு மார்கெட்டில் உள்ள பழ மார்க்கெட்டில் காலியாக உள்ள மூன்று கடைகள் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் உள்ள குடோனையும் பார்வையிட்டார். புதிதாக கட்டப்பட்ட சி.எம்.டி.ஏ அலுவலக வளாகத்தையும் ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் தற்போது உள்ள நேரக்கட்டுப்பாட்டை முற்றிலும் அகற்றவும், மார்க்கெட் வளாகத்தில் மினி கிளினிக் மற்றும் அம்மா உணவகம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது ஓ.பி.எஸ் உடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் கார்த்திகேயன் இருந்தார்.