முன்னள் முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று மாலை 7 மணி அளவில் தனது இல்லத்திலிருந்து அவசரமாக வெளியே கிளம்பிச் சென்றார்.அப்போது அங்கிருந்த அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, அவருக்கு சற்று உடல்நிலை சரியில்லை; அதற்காக பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்வதாக சிலர் தெரிவித்தனர். சிலர் அவரது உறவினர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க செல்வதாக தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில், அவரது கொரோனா தொற்று உறுதியாக சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஓ.பி.எஸ்.க்கு லேசான தொற்றே இருப்பதாகவும், இருந்தாலும் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மருத்துவமனையில் அனுமதியாகியிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.