
புதுக்கோட்டையில் எம்ஜிஆர் சிலைக்கு அருகே ஜெயலலிதாவின் சிலை வைக்க ஓபிஎஸ் அணியினர் முயன்ற நிலையில் காவல்துறை அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் ஓபிஎஸ் அணியின் சார்பாக வடக்கு மாவட்ட அதிமுக அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. அலுவலகத்தைத்திறந்து வைப்பதற்காக ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் வந்திருந்தனர். முன்பாக பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மார்பளவு உருவ சிலையை எம்ஜிஆர் சிலை அருகில் நிறுவ முயன்றனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அதைப் பறிமுதல் செய்து வாகனத்துடன் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us