Advertisment

ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்!

அதிமுக ஒற்றைத் தலைமை நிலைப்பாட்டில் ஏற்பட்ட முரண்களை தொடர்ந்து ஓபிஎஸ்க்கு இருந்த மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு எண்ணிக்கை 6 ஆக சரிந்துள்ளது. தற்பொழுது வரை 5 மாவட்டச் செயலாளர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டில் உள்ளனர். வைத்தியலிங்கம். மனோஜ் பாண்டியன், தர்மர், தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் ஆகிய 5 பேர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.

Advertisment

உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற நிலையிலும் அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலால் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெ.நினைவிடத்தில் குவிந்து வருகின்றனர். மேலும் அங்கு குவிந்துள்ள தொண்டர்கள் ஒற்றை தலைமை நிலைப்பாட்டுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது ஓபிஎஸ் அவரது வீட்டில் தொண்டர்களைசந்தித்து வருகிறார்.

Advertisment

struggle jayalalitha memorial O Panneerselvam admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe