Skip to main content

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தி.மு.க.வில் ஐக்கியமாக போகிறார்களா? எம்.பி. கனிமொழியை சந்தித்த அ.தி.மு.க. எம்.பி.!

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

மோடி அரசின் இறுதி பாராளுமன்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வழக்கம்போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். அதுபோல் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி.களும் இறுதி பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் கலந்து கொண்டார். அப்பொழுது டெல்லியில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை திடீரென அ.தி.மு.க. எம்.பி.யான பார்த்திபனும், தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் சிவக்குமார், அபுதாகீர், ஜெய்லானி உள்பட பத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து குரூப் போட்டோ எடுத்திருக்கிறார்கள். 

 

meet

 

அதுபோல் சுப்பிரமணியசுவாமியையும் சந்தித்து குரூப் போட்டோ எடுத்திருக்கிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட குரூப் போட்டோவால் அ.தி.மு.க. எம்.பி.யான பார்த்திபன் பேஸ்புக், வாட்சப் மூலம் போட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

 

 

இது சம்மந்தமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது... துணை முதல்வரான  ஓ.பி.எஸ்சியின் தீவிர ஆதரவாளர்கள்தான் எம்.பி. பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் உடன் சென்ற மாவட்ட பொறுப்பாளர்கள். இதில் பார்த்திபனுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மாவிடம் சீட் வாங்கி கொடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்து  பார்த்திபனை எம்.பி.யாக்கினார் அண்ணன் ஓ.பி.எஸ். 

 

அதைத் தொடர்ந்து தற்போது அண்ணன் ஓ.பி.எஸ். உடன் தான் பார்த்திபனும், மற்ற ஆதரவாளர்களும் இருந்து வருகிறார்கள். இந்தநிலையில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ்சியின் மகன் ரவீந்திரநாத் தேர்தலில் போட்டி போட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே ஒரு அதிருப்தியும் நிலவி வருகிறது. அதுபோல் தற்போது எம்.பி.யான பார்த்திபனும் மீண்டும் போட்டி போட சீட் கேட்க இருந்தார். இந்த நிலையில் தான் திடீரென ஓ.பி.எஸ். மகனை சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதின் மூலம் அவருக்குத்தான் ஓ.பி.எஸ். சீட் கொடுப்பார் என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அதனால்தான் எம்.பி. பார்த்திபனும், மாவட்ட பொறுப்பில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் டெல்லிக்கு சென்றவர்கள் திடீரென அங்குள்ள கனிமொழியை சந்தித்து பேசியிருக்கிறார். 

 

meet

 

இப்படி கனிமொழியை சந்தித்து பேசி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் மீண்டும் பார்த்திபனுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் பார்த்திபனும் அவருடன் டெல்லிக்கு சென்றவர்களும் தி.மு.க.விற்கு தாவப் போகிறார்கள் என்ற பேச்சும் அ.தி.மு.க.வினருக்கிடையே பேசப்பட்டும் வருகிறது. அதனால் ஓ.பி.எஸ். பார்த்திபனையும், அவருடன் டெல்லிக்கு சென்றவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையிலும் இறங்க இருக்கிறார் என்று கூறினார்கள். 

 

 

இதுசம்மந்தமாக டெல்லி சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது... பாராளுமன்ற கூட்டம் கடைசி என்பதால் அதை பார்வையிடவும், ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்ப்பதற்கும் சென்றோம். அப்போது அங்கிருந்த தி.மு.க. எம்.பி. கனிமொழியையும் மற்றும் சுப்பிரமணியசுவரி உள்பட சில முக்கிய வி.ஐ.பி.க்களையும் பார்த்து பேசி குரூப் போட்டோ எடுத்தோம். இதெல்லாம் அரசியலில் சகஜம்ங்க இதப்போய் பெரிசுபடுத்துகிறீர்களே என்று கூறினார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்