Advertisment

''வேலை பிடித்தாலும், ஆளை பிடித்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது'' - ஓபிஎஸ் பேச்சு

ops speech in jayalalitha temple open function

Advertisment

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளடி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாமற்றும் எம்ஜிஆருக்கு கட்டப்பட்டகோவிலைதமிழக முதல்வர் திறந்துவைத்தார்.

தமிழகவருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னெடுப்பில் கட்டப்பட்டுள்ள கோவில், இன்று (30.01.2021) திறக்கப்பட்டது. மொத்தம் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில்முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் இருவருக்கும்7 அடியில்வெண்கலச் சிலைகள்அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தக் கோவில்திறப்பு விழாவிற்குவந்த முதல்வர் எடப்பாடிபழனிசாமிமற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்குசுமார்20 கிலோமீட்டர் தூரத்திற்குஅதிமுகநிர்வாகிகள் சார்பில்வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்யாகசாலை,கோபூஜைக்கும்ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நலிவுற்ற அதிமுகதொண்டர்கள் 234 பேருக்கு10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டஉதவிகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில்முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வேல் பரிசாக அளிக்கப்பட்டது.

Advertisment

இந்தக் கோவில் திறப்பு விழாவில்பேசியதுணைமுதல்வர்ஓ.பி.எஸ், “ஆட்சியைப் பிடிக்க சிலர்வேலை கையில் பிடித்து வருகிறார்கள். வேலை பிடித்தாலும், ஆளை பிடித்தாலும்ஆட்சியை மட்டும் பிடிக்கமுடியாது,” எனதிமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகாகவிமர்சித்தார்.

அண்மையில் கிராமசபைக் கூட்டம் ஒன்றில்திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்ட நிலையில், அவர் வேலுடன் நிற்கும் புடைக்கப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

temple jayalalitha ops_eps madurai admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe