அமெரிக்காவில் படிச்சிட்டு மீனம்பாக்கம் ஏர்போட்டில் இருந்து நேராக கட்சிக்கு வரவில்லை... ஓபிஎஸ் மகன் பேட்டி!

ops son P Raveendranath Kumar interview

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்றும், நாளையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் பெற்றது. கூட்டணிக்கு கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் 20 தொகுதிகளுக்கும், நாளைய தினம் 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

ops son

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தேனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நேர்காணலில் கலந்து கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்,

குடும்ப அரசியலுக்கு எதிராக இருக்கிறார் ஓபிஎஸ், ஆனால் ஓபிஎஸ் மகனான நீங்கள் போட்டியிட இருப்பது குடும்ப அரசியலுக்கு வித்திடாதா? என்ற கேள்விக்கு,

ஓபிஎஸ்சின் மகன் என்பதால் வாரிசு அரசியல் முத்திரை வந்துவிடுமா. நான் அமெரிக்காவில் படிச்சுட்டு நேராகமீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்து கழகத்திற்கு வந்து சேர்ந்து இங்கே எனது அப்பா பதவியில் இருக்கிறார் எனக்கு சீட் கொடுங்கள் என கேட்கவில்லை. நான் 18 வயதிலிருந்து கட்சி பணிகளில் இறங்கியுள்ளேன். இப்போது எனக்கு 39 வயது. 21 வருடமாக ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு சென்று கட்சிப்பணி செய்துள்ளேன். தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே கிடையாது. எனக்கு சீட் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது எனக்கூறினார்.

ops son P Raveendranath Kumar ops son politics admk
இதையும் படியுங்கள்
Subscribe