Advertisment

ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு நிவாரண உதவி! ஒ.பி.எஸ். மகன் வழங்கினார்!

ops son jayapradeep

Advertisment

ரம்ஜானை முன்னிட்டு தேனி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஓபிஎஸ் சார்பில் அவருடைய இளைய மகன் ஜெயபிரதீப் நிவாரண உதவிகளை வழங்கினார்.

துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த தொகுதியான போடி தொகுதியிலுள்ள 14 பள்ளிவாசல் பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்களுக்கும் அதுபோல் பெரியகுளத்தில் உள்ள ஏழு பள்ளிவாசல் பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் 4400 பேருக்கு மேற்பட்டோருக்கு வேட்டி சேலையுடன் உதவி தொகையையும் ரம்ஜான் நிவாரண உதவியாக ஒபிஎஸ் சின் இளைய மகனான ஜெயபிரதீப் வழங்கினார்.

அதுபோல் தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம். கம்பம். கூடலூர்.ஆண்டிபட்டி. தேனி சின்னமனூர். தேவதானப்பட்டி உள்பட நான்கு சட்டமன்ற தொகுதியிலும் இருக்க க்கூடிய பெரும்பாலான முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜானை முன்னிட்டு நிவாரண உதவிகளை துணை முதல்வர் ஒபிஎஸ்சின் இளைய மகன் ஜெய பிரதீப் வழங்கி வருகிறார்.

Advertisment

இதில் மாவட்ட செயலாளர் சையது கான்.போடி நகர நகர செயலாளர் பழனிராஜ், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி. கணேசன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், தேனி மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாகிர், பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது உள்பட கட்சி பொறுப் பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.

help ops THENI DISTRICT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe