/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops_138.jpg)
எடப்பாடி பழனிசாமியுடன்இணைப்பு என்பதற்கே இடமில்லை என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேச வேண்டும். எங்களுடன் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளியிடப்படும். கொங்கு மண்டலம் என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை. அங்குள்ள தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தில் ஆதரவு இல்லை என்பதை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு காட்டியுள்ளது.
ஆளுநரே அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கினார். பின்னர் அவரே அதனை நிறுத்தி வைத்துள்ளார். கடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றி தந்தோம். அதற்குரிய செயல் அவரிடம் இல்லை. நான்கரை ஆண்டுகாலம் பொறுத்திருந்தோம். இனிமேலும் அந்த தவறை செய்யக்கூடாது என்பது தான் எங்களுக்கு உரிய பாடம். தொண்டர்களின் விருப்பத்தின் படி எங்கள் செயல்பாடு இருக்கும். எடப்பாடி பழனிசாமி உடன் இணைப்பு என்பதற்கே இடமில்லை” எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)