தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்துவருகிறது.குறிப்பாக, சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களைச் சந்தித்து நிவாரணம் வழங்கிவருகிறார்கள். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (12.11.2021) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பார்வையிட்டார். தென்சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட ஓ.பி.எஸ்., அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஓ.பி.எஸ்.! (படங்கள்)
Advertisment
Follow Us