Advertisment

ஓ.பி.எஸ். சகோதரர் மீது புதிய புகார்! 

O.P.S. New complaint against brother!

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நடத்தும் பள்ளிக்காக அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி மண் அள்ளியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தேனி மாவட்டம், பெரியகுளம், லட்சுமிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஓ.ராஜாவுக்கு சொந்தமான பள்ளியின் கட்டுமான பணிக்கு அரசின் அனுமதியின்றி புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி எடுக்கப்பட்டதாக முத்து சக்கரவர்த்தி என்பவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Theni Leader admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe